Kathir News
Begin typing your search above and press return to search.

உள்நாட்டு விமான பயணத்திற்கு மருத்துவ சான்று.!

விமானம் மற்றும் ரயில் பயணம் மேற்கொள்ளும்போது கட்டாயம் முககவசம் அணிந்து கொண்டு பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு விமான பயணத்திற்கு மருத்துவ சான்று.!
X

ThangaveluBy : Thangavelu

  |  27 April 2021 10:10 AM IST

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், உள்நாட்டு விமான பயணிகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என்ற சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் 2வது அலை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

அதில் குறிப்பாக விமானம் மற்றும் ரயில் பயணம் மேற்கொள்ளும்போது கட்டாயம் முககவசம் அணிந்து கொண்டு பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.




இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து, வெளிநாடுகளுக்கு செல்லும் விமான பயணிகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற மருத்துவ சான்றுடன் பயணிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் இருந்து மற்ற மாநிலங்களான அந்தமான், ஒடிசா, ராஜஸ்தான், மணிப்பூர், மேற்குவங்காளம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்வதற்கு கட்டாயம் கொரோனா சான்று வைத்திருக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.





இந்த மாநிலங்களுக்கு செல்பவர் கடந்த 72 மணி நேரத்திற்கு முன்பு, கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்ற சான்று பெற்றிருக்க வேண்டும். அதன் பின்னரே விமானத்தில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News