Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில், 29.36 லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்பு! சாதனை படைக்கும் ஜல் ஜீவன் இயக்கம்21

தமிழகத்தில், 29.36 லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்பு! சாதனை படைக்கும் ஜல் ஜீவன் இயக்கம்21

தமிழகத்தில், 29.36 லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்பு! சாதனை படைக்கும் ஜல் ஜீவன் இயக்கம்21

Muruganandham MBy : Muruganandham M

  |  21 Nov 2020 6:45 AM GMT

மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் ஜல் ஜீவன் இயக்கம், 2024-ம் ஆண்டு வாக்கில் வீடுகளுக்கு குழாய் இணைப்பு மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், அங்கன்வாடி மையங்களுக்கும், உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கும் உறுதியளிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் 100 நாள் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி, தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள 1.26 கோடி ஊரகப் பகுதி வீடுகளில், 29.36 லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு, 34 லட்சம் ஊரகப் பகுதி வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. சன்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ், பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த 117 கிராமங்களில் 100% இணைப்பும், எஸ்சி, எஸ்டி அதிகம் வசிக்கும் கிராமங்களில் 90% இணைப்பும் வழங்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் காவிரி ஆற்றின் கரையில் உள்ள போதிலும், மாவட்டத்தின் பல பகுதிகள், முற்றிலும் நிலத்தடி நீரையே நம்பியுள்ளன. பல கிராமங்களில் பாதுகாப்பான குடிநீர் வசதியே இல்லை. இக்கிராம மக்களுக்கு ஜல் ஜீவன் இயக்கம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பாதுகாப்பான குடிநீர், தண்ணீரால் உருவாகும் நோய்கள் பரவுவதைத் தடுப்பதுடன், மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாத்து, அதன் மூலம் ஆரோக்கிய இந்தியா என்னும் லட்சியத்தை எட்ட உதவும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News