நிர்வாக அலட்சியம்! வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு கொரோனா தொற்று!
By : Muruganandham
வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாநகராட்சி நகர சுகாதார அலுவலர் டாக்டர் டி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையின் அதிகாரி ஒருவர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உள்ளடக்கிய குழுவிற்கு பாதிப்பு இருப்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் சரியான புள்ளிவிவரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்றார்.
மேலும், ஊழியர்கள் பாதிக்கப்பட்ட அளவை பொறுத்தவரை, இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஒரு ஊழியர் அல்லது நோயாளிக்கு அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் பரிசோதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள்.
பாதிப்பின் தீவிரத்தின் அடிப்படையில் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள். பிரத்யேக கோவிட் வார்டு அமைக்கப்பட்டுள்ளது. எங்களிடம் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் இருந்தாலும், ICU களின் தேவை குறைவாக உள்ளது, "என்று அந்த அதிகாரி கூறினார்.
சிகிச்சை பெறுவோர், வெளிநோயாளிகள் வருகைகள், பிற அவசரமற்ற சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கான ஆன்லைன் முன்பதிவை மருத்துவமனை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அவசர சேவைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
வேலூர் மாநகராட்சி வெள்ளிக்கிழமை சி.எம்.சி.க்கு அருகிலுள்ள பாபு ராவ் தெருவை கட்டுப்பாட்டு மண்டலமாக வகைப்படுத்தியது, ஏனெனில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தெருவைச் சேர்ந்த குறைந்தது ஆறு நபர்களுக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.