மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தியில் இறங்கிய ஸ்டெர்லைட் ஆலை.!
ஸ்டெர்லைட் ஆலையில் இயந்திர கோளாறு காரணமாக தடைப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது.
By : Thangavelu
ஸ்டெர்லைட் ஆலையில் இயந்திர கோளாறு காரணமாக தடைப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மருத்துவனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் ரயில் மற்றும் விமானம் மூலமாக கொண்டுவரப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடைய தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையில் தற்காலிகமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதன் பின்னர் முதற்கட்டமாக 5 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சூழலில் ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக ஆக்சிஜன் தயாரிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு, இன்று முதல் மீண்டும் ஆக்சிஜன் விநியோகம் நடைபெறுகிறது. இன்று மாலை முதல் தென்மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு லாரிகள் மூலம் ஆக்சிஜன் அனுப்பப்படுகிறது.