Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரையில் வெண்டிலேட்டர், ஆக்சிஜன் வசதிகளுடன் 31 ரயில் பெட்டிகள் தயார்.!

மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் திணறி வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மதுரையில் வெண்டிலேட்டர், ஆக்சிஜன் வசதிகளுடன் 31 ரயில் பெட்டிகள் தயார்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  13 May 2021 12:52 PM IST

மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் திணறி வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், சமயநல்லூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 31 கொரோனா ரெயில் பெட்டிகள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்துபோது, வெண்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் பல்வேறு நவீன அம்சங்களுடன் ரயில் பெட்டி தயாரானது.





இவற்றில் மருத்துவ உபகரணங்கள் பொருத்த வசதியாக, 220 வோல்ட் மின்சார பிளக்பாயின்ட்கள் வடிமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டிக்கு 4 கழிவறைகள், 2 குளியல் அறைகள் உள்ளது. ஒவ்வொரு குளியல் அறையிலும் தலா ஹேண்ட் ஷவர், வாளி, கோப்பை ஆகியவை வைக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே மதுரை மாவட்டத்தில் நிலவி வரும் படுக்கை வசதிகளுக்கு இணையாக 31 ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே நோயாளிகளை ரயில் பெட்டிகளில் வைத்து சிகிச்சை அளிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

இதற்காக மதுரை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை தமிழகத்திற்கு செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News