பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்: மனதார கண்டு தரிசித்த பக்தர்கள்!
பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பான முறையில் நடந்தது.
By : Bharathi Latha
உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதை எடுத்து 2019 ஆம் ஆண்டு பூஜையுடன் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கினர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த அரங்காவலர்கள் குழு அலுவலர்கள் கூட்டத்தில் ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் முடிவுற்றும் நடைபெற்றது. அதன்படி கும்பாபிஷேகத்திற்கான ஐந்து யாக கால பூஜைகள் நடைபெற்றது.
இன்று காலை நான்கு முப்பது மணிக்கு எட்டுக்கால் யாக பூஜைகள் நடைபெற்றது. பல்வேறு வகையான பொருட்கள் மூலிகைகளால் சிறப்பு யாகம் தீபாரதனை காட்டப்பட்டது. தொடர்ந்து திருமுறை, கந்தபுராணம், திருப்புகழ் பாடப்பட்டது பின்னல் யாகசாலையில் இருந்து சக்தி கலசங்கள் புறப்பட்டு தொடர்ந்து வாத்திய இசை முழங்க ராஜகோபுரம் தங்க விமானத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்ட கும்பாபிஷேகம் நடைபெற்று இருந்தது.
முருகப்பெருமானை தரிசிப்பதற்காக திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டார்கள். மேலும் கும்பாபிஷேகத்தை ஒட்டி முக்கிய பிரமுகர்கள் பழனி கோவிலுக்கு வருகை தந்தனர். பெரும்பாலும் ரோப் கார்கள் மூலம் சென்றனர் இதனால் அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Maalaimalar