பாளை சிறையில் கைதி படுகொலை எதிரொலி.. சிறைத்துறை டி.ஜ.ஜி. அதிரடி உத்தரவு.!
திருநெல்வேலியில் இறந்த கைதியின் உறவினர்கள், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
By : Thangavelu
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கைதியை மற்ற கைதிகள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் திருநெல்வேலியில் இறந்த கைதியின் உறவினர்கள், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், சிறைக்குள் நடந்த சம்பவம் தொடர்பாக பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது சிறைத்துறை மூலம் துறைரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி துணை சிறை அலுவலர் சிவன், உதவி சிறை அலுவலர்கள் சங்கரசுப்பு பிள்ளை, கங்காராஜன், ஆனந்தராஜ், முதல் தலைமை காவலர் வடிவேல் முருகையா, சிறைக் காவலர் சாம் ஆல்பர்ட் ஆகிய 6 பேரை டி.ஜ.ஜி. பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.