Kathir News
Begin typing your search above and press return to search.

பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்றதை பாக்கியமாக கருதுகிறேன் - அண்ணாமலை உருக்கம்!

பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்றதை பாக்கியமாக கருதுகிறேன் - அண்ணாமலை உருக்கம்!
X

ThangaveluBy : Thangavelu

  |  23 May 2022 6:18 AM GMT

தருமபுர ஆதின பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நேற்று (மே 22) கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த மிகவும் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீன திருமடம் உள்ளது. அங்கு சைவத்தை மற்றும் தமிழை வளர்க்கும் ஆதீன மடத்தில் வருடம்தோறும் குருபூஜை விழா, பட்டினப் பிரவேச நிகழ்ச்சி, வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிகழ்வில் 11ம் நாள் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடைபெறுவது வழக்கம்.

இதனிடையே மனிதனை மனிதன் சுமந்து செல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று, கடவுள் மறுப்பு கொள்கையை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் பின்னர் தி.மு.க. ஆட்சி என்பதால், மயிலாடுதுறை கோட்டாட்சியர் அந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்தார். இதற்கு தமிழக பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளிடம் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனிடையே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்ச்சிக்கு அரசு தடை விதித்தாலும், நானே நேரடியாக கலந்து கொண்டு பல்லக்கு தூக்கி சுமப்பேன் என்று அதிரடி காட்டினார். இதன் பின்னர் தி.மு.க. அரசு உடனடியாக பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நேற்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருஆபாரணங்கள் அணிந்துகொண்டு திருக்கூட்ட அடியவர்கள் புடைசுழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது பல்லக்கினை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் நாட்டாமைகள் தலைமையில் 70 பேர் தோளில் சுமந்து வலம் வந்தனர். அப்போது சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் புடைசூழ தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் அமர்ந்து வீதியுலா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: 22ஆம் தேதி தருமபுர ஆதினமான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் பட்டின பிரவேச நிகழ்ச்சியில் நாம் பங்கேற்போம் என்றிருந்தோம்.

அதே போல் இன்று இந்த வரலாற்று நிகழ்வில் ஒரு சிஷ்யனாகப் பங்கேற்றதை என் பாக்கியமாகக் கருதுகிறேன்.

தமிழகத்தில் ஆன்மீக மறுமலர்ச்சி! இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News