பச்சை நிறத்தில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்.. நேரடியாக களத்தில் இறங்கிய பா.ம.க. எம்.எல்.ஏ., ஜி.கே.மணி.!
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகும். இதன் மூலம் 1300 லட்சம் திட்டம் தினமும் சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஒரு சில வாரங்களாக தண்ணீர் பச்சை நிறத்தில் வந்தது. இதனால் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள மக்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி ஏற்பட்டது.
By : Thangavelu

ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் அவதியுற்று வரும் நிலையில், தற்போது ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பொதுமக்களுக்கு காய்ச்சல் வருவது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பச்சை நிறத்தில் வரும் தண்ணீர் குறித்து பென்னாகரம் சட்டமன்ற தொகுதியின் பாமக எம்.எல்.ஏ., ஜி.கே.மணி நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். பென்னாகரம் அடுத்துள்ள மடம் கிராமத்தில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர், மற்றும் செயற்பொறியாளரிடம் நீரின் சுத்திகரிப்பு தன்மை குறித்து ஆலோசனை நடத்தினார்.
பொதுமக்களுக்கு முறையான குடிநீர் வழங்க வேண்டும் எனவும், கொரோனா காலத்தில் நீர் நல்ல முறையில் சுத்திகரித்து வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கண்டிப்புடன் தெரிவித்தார். இதற்கு முன்னர் திமுக எம்.எல்.ஏ.வாக இன்பசேகரன் இருந்தார். அவர் தொகுதி மக்கள் குறையும் கேட்டதில்லை, எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.