Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. ஆட்சியின் அவலம்.. ஒரு லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களின் ஓய்வூதியம் நிறுத்தி வைப்பு.!

மே மாதம் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பிற்கு வந்த திமுக மே, ஜூன், ஜூலை ஆகிய மூன்று மாதங்களாக ஓய்வுபெற்ற அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாத்திரை, மருந்துகளை பெறமுடியாமல் வயது மூப்புக்காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

தி.மு.க. ஆட்சியின் அவலம்.. ஒரு லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களின் ஓய்வூதியம் நிறுத்தி வைப்பு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  12 July 2021 3:45 PM IST

திமுக ஆட்சிக்கு வந்த 3 மாதங்களாக அமைப்பு சாரா தொழிலாளர்களின் ஒரு லட்சம் பேரின் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படிருப்பதால் அதிமுக தலைமை ஒப்புதலுடன் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று கட்டுமான பணியாளர்கள் முன்னாள் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் இளஞ்சூரியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த 12 லட்சம் பேருக்கு அரசின் நிவாரணம் வழங்கப்பட்டது. மாதந்தோறும் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.

மே மாதம் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பிற்கு வந்த திமுக மே, ஜூன், ஜூலை ஆகிய மூன்று மாதங்களாக ஓய்வுபெற்ற அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாத்திரை, மருந்துகளை பெறமுடியாமல் வயது மூப்புக்காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

மேலும் அவர் கூறியதாவது: திமுக அரசு கட்டுமான தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்துள்ளதை வண்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக ஓய்வூதியத்தை வழங்காவிட்டால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை சந்தித்து அவர்களின் ஒப்புதலுடன் அண்ணா தொழிற்சங்கம் போராட்டத்தை முன்னெடுக உள்ளதாக கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News