அடிப்படை வசதிகள் வேண்டி புகார் தெரிவித்தும் அதிகாரிகள் அலட்சியம் - கடுப்பில் அரசு பஸ்ஸை சிறைபிடித்த கிராம மக்கள்!
ராஜபாளையம் அருகே அரசு பேருந்து சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
By : Bharathi Latha
ராஜபாளையம் அருகே உள்ள முதுகுடி மக்கள் இங்கு சாக்கடை, குடிநீர் உள்ளிட்டு அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை என்று அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டை முன்வைத்து இருக்கிறார்கள். இதனால் அந்த பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இது பற்றி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை 6:00 மணிக்கு முதுகுடியில் இருந்து ராமலிங்கபுரம் செல்லும் சாலையில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கிராம மக்களாக திரண்ட அந்த வழியில் வந்து அரசு பேருந்து சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டார்கள். இந்த சாலையில் ராஜபாளையம்- சங்கரன் கோவில் பிரதான சாலை இணைப்பு வழியாக இருப்பதால், இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்து கீழ ராஜகுல போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தார்கள்.
அப்பொழுது கிராம மக்கள் தங்கள் பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தராமல் புறக்கணிக்கப்படுவதாக கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்ததை அடித்து 9:00 மணி அளவில் கிராம மக்கள் கலைந்து சென்றார்கள். இதனால் அந்த பகுதியில் சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Maalaimalar