குடிநீரில் கழிவு நீர் கலக்கும் அவலம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு?
மக்கள் குடிக்கும் குடிநீரில் கழிவு நீர் கலக்கும் அவலம் பொதுமக்களின் குற்றச்சாட்டுகள்.
By : Bharathi Latha
மதுரவாயிலில் குடிநீர் நீரேற்று நிலையத்தில் தேங்கியுள்ள மழை நீர் காரணமாக அங்கு கழிவுநீர் தேங்கியதால் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீரிலும்,கழிவுநீர் கலந்து வருவதாக மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறார்கள். வளசரவாக்கம் மண்டலம் 147 ஆவது வார்டு மதுரவாயில் விவேகானந்தர் தெருவில் குடிநீர் வாரிய நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து மதுரவாயில் சுற்று வட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
சென்னையில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக குடிநீர் ஏற்ற நிலையத்தில் குடிநீர் தொட்டியை சுற்றி மழை நீர் தேங்கியது. அத்துடன் நீரேற்று நிலையம் வெளியே செல்லும் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் தேங்கிய மழைநீரில் கலந்தது. இதன் காரணமாக நீர்நிலை தொட்டிகளில் உள்ள குடிநீரில் கழிவு நீர் கலந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.
அத்தோடு வீடுகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் விசுவதாகவும் அந்த பகுதி மக்கள் புகார் ஒன்றை தெரிவித்து இருக்கிறார்கள். எனவே நீர் ஏற்றும் தொட்டியை சுற்றி, கழிவுநீர் கலந்த மழை நீரை அகற்றி விட்டு கீழ்நிலை தொட்டியை சுத்தம் செய்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: Dinamalar