Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னிமலை அருகே கனிம வளங்களை திருடும் அரசியல் பிரமுகர்கள் - ஆட்சியரிடம் மனு!

சென்னிமலை அருகே கனிம வளங்களை கோடிக்கணக்கான மதிப்பில் திருடும் அரசியல் பிரமுகர்கள் பற்றி மனு கொடுத்த பகுதி மக்கள்.

சென்னிமலை அருகே கனிம வளங்களை திருடும் அரசியல் பிரமுகர்கள் - ஆட்சியரிடம் மனு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 Dec 2022 3:32 AM GMT

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் திங்கட்கிழமை அன்று நடைபெற்றது. இந்த குறை தீர்ப்பு கூட்டத்தின் போது, அந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தங்களுடைய குறைகளை மனுவாக ஆட்சியரிடம் அளித்து முறையாக நடவடிக்கைக்கு விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் தற்பொழுது ஈரோடு பகுதியை சேர்ந்த மக்கள் அரசின் நிலங்களை ஆக்கிரமித்து, சிலர் கனிம வளங்களை திருடி வருவதாகவும் குற்றச்சாட்டை தற்போது முன்வைத்திருக்கிறார்கள் இது தொடர்பாக மனு ஒன்றை ஈரோடு மாவட்ட கலெக்டர் அவரிடம் கொடுத்திருக்கிறார்கள்.


மேலும் இந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட சென்னிமலை பகுதியை சேர்ந்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர், முகிலன் என்பவர் சட்ட விரோதமான கல்குவாரி அமைக்க எதிர்ப்பு மனுவை தற்போது அளித்து இருக்கிறார். மேலும் ஈரோடு சென்னிமலை தெற்கு பகுதியில், கடாம்பாளையம் பகுதியில் தீர்த்த குளம் ஒன்று அமைந்து இருக்கிறது. இந்த தீர்த்த குளத்திற்கு செல்லும் வழியில் உள்ள அரசு நிலங்களை சிலர் ஆக்கிரமித்து வருவதாகவும், மேலும் இந்த ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கனிம வளங்களை அரசியல் பிரமுகர்கள் திருடி கொள்ளை அடிப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.


மேலும் கடம்பாளையம் கிராமத்தில் அரசு அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக, குறிப்பாக 42 மீட்டர் அளவிற்கு அதிகமான கனிம வளங்களை தோண்டி எடுத்து அவற்றின் மூலமாக கோடிக்கணக்கான பணம் சுருட்டியதாகவும் குறிப்பிடுகிறது. இது பற்றி உரிய ஆதாரங்களுடன் தகவல் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே சென்னிமலை பகுதிகளில் இயற்கை வளங்களை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News