Begin typing your search above and press return to search.
ஒரு மாதம் பரோல் முடிந்து புழல் சிறைக்கு மீண்டும் அழைத்துச்செல்லப்படும் பேரறிவாளன்.!
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒரு மாதம் பரோல் பெற்று சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

By : Thangavelu
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பேரறிவாளன்.
இவருக்கு கடந்த மாதம் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் திருப்பத்தூரில் உள்ள அவரது வீட்டுக்கு கடந்த மாதம் 28ம் தேதி சென்றார்.
தற்போது ஒரு மாதம் பரோல் முடிவடைந்து சென்னையில் உள்ள புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுகிறார். அவரை போலீசார் பாதுகாப்புடன் வாகனத்தில் அழைத்து செல்கின்றனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒரு மாதம் பரோல் பெற்று சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
