Begin typing your search above and press return to search.
தருமபுரி: பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் சொத்துக்களை மீட்க மனு!
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோயிலுக்கு சொந்தமாக ஏராளமான நிலங்கள் மற்றும் கடைகள் இருக்கிறது. இதனை பலர் சட்டவிரோதமாகவும், பலர் குறைந்த வாடகை அளித்தும் உபயோகித்து வருகின்றனர்.

By :

இதனிடையே சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான கடைகள் பாப்பாரப்பட்டி காவல் நிலையம் முன்பாக அமைந்துள்ளது. இந்த கடைகள் மழையில் சேதமடைந்ததால், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதனிடையே கடைகளில் வைக்கப்பட்டிருந்த மரக்கதவுகள், தளவாட பொருட்களை மர்ம நபர்கள் திருடிவிட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி சேலம் திருத்தொண்டர் சபையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
Source: Dinamalar
Image Courtesy:Kathirnews
Next Story