Kathir News
Begin typing your search above and press return to search.

பெட்ரோல் குண்டு பதற்றம் - திருவாரூரில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை

பெட்ரோல் குண்டு வெடிப்பு காரணமாக பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு பதற்றம் - திருவாரூரில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை
X

Mohan RajBy : Mohan Raj

  |  24 Sept 2022 7:33 PM IST

பெட்ரோல் குண்டு வெடிப்பு காரணமாக பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு போடும் தொடர் நிகழ்வுகளின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பா.ஜ.க பிரமுகர்களின் இல்லம் மற்றும் அலுவலகங்கள், இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களில் பெட்ரோல் வீச்சு நடைபெற்று வருகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்ட காவல்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டது.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பா.ஜ.க அலுவலகங்கள், பள்ளிவாசல்கள் என 67 இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News