கலெக்டர் பங்களாவில் இருந்து பிள்ளையார் சிலை அகற்றமா? கொந்தளிக்கும் இந்து அமைப்புகள்!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் இல்லத்திலிருந்து பிள்ளையார் அகற்றப்பட்டது.
By : Bharathi Latha
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மெர்ஸி ரம்யா பொறுப்பேற்றுக் கொண்டவுடன் ஆற்றிய முதல் காரியம் என்ன தெரியுமா? அறுபது ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் பங்களாவில் நுழைவாயிலில் கம்பீரமாக அமர்ந்திருந்த வினைகள் தீர்க்கும் வினாயகரை உடனடியாக அங்கிருந்து பெயர்த்து நீக்கியது தான். பிள்ளையார் அங்கிருந்தால் பங்களாவிற்கு குடியேற மாட்டேன் என்று கூறிய கலெக்டர், தனது அலுவலகர்களைக் கொண்டு உடனடியாக அச்சிலையை நீக்கும்படி செய்தார்.
அவ்வாறு அலுவலர்கள் வினாயகர் சிலையை அகற்றும் போது சிலை சிதிலமடைந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ கலெக்டர்கள் பணிபுரிந்துள்ளனர். அதில் கிருஸ்துவர்கள், முஸ்லிம்கள் என்று எவருமே பழமையான தொன்மையான கலெக்டர் பங்களாவில் எதையும் நீக்கும் ஈனச்செயலை செய்யவில்லை. கலெக்டர் பங்களா அவரது சொந்த வீடு கிடையாது.
தொன்மை வாய்ந்த கட்டிடத்தில் எதையும் மாற்றவோ நீக்கவோ கலெக்டருக்கு அதிகாரம் கிடையாது. இருந்தும் இவ்வாறு சாமி சிலையை அடியோடு அகற்றியது மெர்ஸி ரம்யாவின் ஆழமான மதவெறியை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. அதேசமயம், ஆட்சியர் பங்களாவைச் சேர்ந்தவர்களோ, பங்களாவில் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருவதால், அதற்குத் தோதாக பிள்ளையார் சிலையை வேறு இடத்தில் வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
Input & Image courtesy: News