Kathir News
Begin typing your search above and press return to search.

உப்பு சப்பே இல்லாமல் ஐடியா கொடுக்கும் பி.கே டீம்! பரோட்டா, பிரைடு ரைஸ் தயாரித்து வாக்குச் சேகரித்த தி.மு.க வேட்பாளர் தமிழரசி!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி தி.மு.க வேட்பாளர் தமிழரசி பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் பரோட்டா, பிரைடு ரைஸ் தயாரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

உப்பு சப்பே இல்லாமல் ஐடியா கொடுக்கும் பி.கே டீம்! பரோட்டா, பிரைடு ரைஸ் தயாரித்து வாக்குச் சேகரித்த தி.மு.க வேட்பாளர் தமிழரசி!
X

MuruganandhamBy : Muruganandham

  |  23 March 2021 3:04 AM GMT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி தி.மு.க வேட்பாளர் தமிழரசி பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் பரோட்டா, பிரைடு ரைஸ் தயாரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மானாமதுரை தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ நாகராஜன், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தமிழரசி, அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த தொகுதியை பொறுத்தவரையில் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இந்த சூழலில் இத்தொகுதியைக் கைப்பற்ற திமுக, அமமுக போராடி வருகிறது. இதனால் வாக்காளர்களைக் கவர வேட்பாளர்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர்.

இதில் முதலாவதாக அ.ம.மு.க வேட்பாளர் மாரியப்பன் கென்னடி மோட்டார் சைக்கிளில் சென்று மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்து அசத்தினார்.

இதனை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் நாகராஜன், திருப்புவனம் தினசரி சந்தைக்கு சென்று அங்கு காய்கறி வியாபாரியாக மாறி வாக்குச் சேகரித்தார்.

இதனை எல்லாம் பார்த்த பி.கே டீம் சும்மா இருப்பாங்களா என்ன? அதற்கு ஒருபடி மேலேபோய் வித்தியாசமான ஐடியா கொடுக்கப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர் தமிழரசி மானாமதுரை பழைய பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அங்குள்ள உணவகத்தில் பரோட்டா, பிரைடு ரைஸ் தயாரித்தார். அதை அவ்வழியாகச் சென்றவர்கள் ஆச்சரியமாகப் பார்த்து சென்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News