Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் பிரதமர் வீடு கட்டும் பணியில் தொய்வு: கட்டப்படாமல் 4,07,980 வீடுகள்!

தமிழகத்தில் பிரதமர் வீடு கட்டும் பணியில் தொய்வு: கட்டப்படாமல் 4,07,980 வீடுகள்!
X

ThangaveluBy : Thangavelu

  |  6 April 2022 4:32 PM IST

மத்திய அரசின் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் இரண்டாம் கட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 7 ஆயிரத்து 980 வீடுகள் கட்டும் பணி துவங்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்காக வீடு கட்டும் திட்டம் துவக்கப்பட்டது. அதன்படி வீடு இல்லாத ஏழைகளுக்கு சுமார் 2 கோடி வீடுகளை 2022 மார்ச் இறுதியில் கட்டி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கு வீடு கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2016 17, 2017 18, 2018 19 உள்ளிட்ட மூன்று ஆண்டுகளுக்கான முதற்கட்டத்தில் 3 லட்சத்து 27 ஆயிரத்து 552 வீடுகளை கட்டுவதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது. ஆனால் தற்போதுவரை 68 ஆயிரத்து 542 வீடுகள் இதுவரையில் கட்டப்படவில்லை.

இரண்டாம் கட்டத்தில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 438 வீடுகள் இன்னும் கட்டி முடிக்கவில்லை. அதே போன்று மார்ச் 2022 வரை இறுதியில் இத்திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 4 லட்சத்து 7 ஆயிரத்து 980 வீடுகள் இதுவரையில் கட்டப்படவில்லை என தெரியவந்துள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News