தமிழ்நாட்டின் வளர்ச்சியை விரும்பும் நபர் மோடி... ஏன் தெரியுமா?
தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவை குறித்த பொதுமக்களின் கருத்துக்களுக்கு பிரதமர் பதில்.
By : Bharathi Latha
தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், தமிழ் மொழி மற்றும் மேக் இன் இந்தியா உணர்வு ஆகியவை குறித்த பொதுமக்களின் கருத்துக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்துள்ளார். ஏப்ரல் எட்டாம் தேதி என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சென்னையில் வருகை தந்து தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து இருக்கிறார். குறிப்பாக மத்திய அரசு பல்வேறு உள்ளது தமிழக மக்களின் நன்மைக்காக தொடர்ந்து செய்து வருகிறது.
இது தொடர்பாக தமிழக பொது மக்கள் பகிர்ந்து கொண்டு ட்விட்டர் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பதிலை மிகவும் அற்புதமாக அளித்து இருக்கிறார். அதில் சில இதோ,bதமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து தெரிவித்துள்ளதாவது, “சென்னை மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இந்த புதிய ஒருங்கிணைந்த முனையம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் அறிந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. நேற்று முன்தினம் தொடங்கப்பட்ட பணிகள், தமிழ்நாட்டின் வளர்ச்சியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.”
மேக் இன் இந்தியா உணர்வு குறித்து கூறியதாவது, "நான் உள்பட, இந்தியாவின் மூலை முடுக்குகளில் உள்ள மக்கள் அனைவரும் இந்த உணர்வைக் கொண்டுள்ளோம். மேக் இன் இந்தியா சின்னத்தில் இடம்பெற்றுள்ள சிங்கம், இந்தியாவின் வலிமை மற்றும் இந்திய மக்களின் திறன்களை உணர்த்துகிறது". தமிழ் மொழி பற்றிய கருத்துக்கு பிரதமர் அளித்த பதில், "நேற்றைய எனது உரையில் கூறியது போல, தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் சென்னையின் ஆற்றல் உணர்வை மிகவும் நேசிக்கிறேன்.”
Input & Image courtesy: News