ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் !
ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி இன்று (அக்டோபர் 7) திறந்து வைக்கிறார். கொரோனா பெருந்தொற்று பேரிடர் தடுப்பு நடவடிக்கையாக இரண்டாம் இலையின் போது பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டது. அந்த சமயத்தில் செயற்கை சுவாசத்திற்கான ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவியது.
By : Thangavelu

இதனை போக்குவதற்காக மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலமாக இந்தியாவுக்கு கொண்டு வந்து லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றியது. இதன் பின்னர் இந்தியாவிலேயே அனைத்து மருத்துவனைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி நிதி ஒதுக்கினார்.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் பெரும்பாலன மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டது. அதன்படி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 ஆயிரம் கிலோ லிட்டர் திரவ நிலை ஆக்சிஜன் உருளை அமைக்கப்பட்டது.
இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையதத்ல் ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். மேலும், பரமக்குடி அரசு தாலுகா மருத்துவமனையிலும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிலையங்களை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டடோர் கலந்து கொள்கின்றனர்.
Source: Dinakaran