உலகையே வியக்க வைக்கும் உத்திரமேரூர் கல்வெட்டு - பிரதமர் மோடி கூறியது என்ன?
உலகத்தை வியக்க வைக்கிறது உத்திரமேரூர் கல்வெட்டு என்று பிரதமர் மோடி பெருமிதமாக கூறியிருக்கிறார்.
By : Bharathi Latha
மனதின் குரல் நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுக்காக உரை ஆற்றுகிறார். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் இருக்கும் உத்திரமேரூர் கல்வெட்டு பற்றி பெருமையாக கூறியிருக்கிறார். குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் உத்திரமேரூர் கல்வெட்டு என்பது மிகவும் பழமையான கல்வெட்டாகும். உலகமே இந்த கல்வெட்டை பற்றி வியக்கும் அளவிற்கு புகழ்வாய்ந்திருக்கிறது. இது மினி அரசியலமைப்பு போன்ற வடிவம் மிக்கப்பட்டு இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமையாக கூறியிருக்கிறார்.
குறிப்பாக மாவட்டத்தின் குரல் நிகழ்ச்சிகளின் பொழுது பழங்குடி மக்களையும் நினைவு கூர்ந்து இருக்கிறார். பழங்குடி மக்களின் வாழ்வை வாழ்க்கை நகர வாழ்க்கை மக்களை விட வேறுபட்டு இருக்கிறது. பல்வேறு சவால்களை விட தற்பொழுது பழங்குடி மக்கள் பத்ம விருதுகள் பெறும் அளவிற்கு தற்போது முன்னேறி இருக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் எவ்வளவு முன்னேறினாலும் தங்களுடைய பழங்குடி வாழ்க்கை மற்றும் மரபுகளை மாறாமல் கடைபிடித்து வருகிறார்கள்.
தொடர்ச்சியான வண்ணம் இந்தியா முன்மொழிந்ததை தொடர்ந்து ஐக்கிய நாட்டு சபையில் உலக யோகா தினம் மற்றும் சர்வதேச சிறுதானிய தினத்தை ஐக்கிய நாட்டு சபை தற்போது அங்கீகரித்து இருக்கிறது. இந்த இரண்டு பிரச்சாரங்களிலும் இந்தியாவில் உள்ள பல்வேறு மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக உடல்நலத்தில் இந்திய மக்கள் யோகாவை தன்னுடைய ஒரு அங்கமாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். சிறு தானியத்தையும் அதேபோல மக்கள் அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
Input & Image courtesy: Dinamalar