பிரதமர் தமிழகம் வரும் வேளையில் திடீரென வந்த குண்டு வெடிப்பு மிரட்டல் கடிதம் - பகீர் தகவல்
தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பயணத்திற்கு இடையே குண்டுவெடிப்பு மிரட்டல்.
By : Bharathi Latha
தமிழகம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்னும் இரண்டு மணிநேரங்களில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுகிறார். இதனால் சென்னையில் உள்ள பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக முன்கூட்டியே காவல்துறையினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது குண்டுவெடிப்பு மிரட்டல் ஒன்று வந்து பலரையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சென்னை வருகிறார். இந்நிலையில் தற்போது வெடிகுண்டு மிரட்டல் வந்தது அனைவரையும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இது உண்மையா? இல்லை எனில் வேண்டுமென்றே செய்யப்பட்ட சதி குறித்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது. சென்னையில், 2,960 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்து திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
75 கிமீ நீளமுள்ள மதுரை-தேனி (ரயில் பாதை மாற்றும் திட்டம்), ரூ. 500 கோடிக்கு மேல் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டது, இப்பகுதியில் சுற்றுலாவை அணுகுவதற்கும் ஊக்கமளிக்கும். சென்னை லைட் ஹவுஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட 1152 வீடுகள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறத்தின் கீழ் 116 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 1152 வீடுகளின் திறப்பு விழாவும் இந்த நிகழ்ச்சிக்கு சாட்சியாக இருக்கும். எனவே இந்த நிகழ்ச்சியை தடுக்கும் விதமாக சேலம் மாவட்டத்தில் இருந்து தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து யாரு இந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பியிருக்கிறார் என்பது தெரிய வருகிறது. இது குறித்து புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
Input & Image courtesy:Thanthi News