Kathir News
Begin typing your search above and press return to search.

கோவை கார் வெடிப்பு சம்பவம் - 5 பேர் மீது பாய்ந்தது உ.பா வழக்கு

கோவை கார் வெடிப்பு சம்பவம் - 5 பேர் மீது பாய்ந்தது உ.பா வழக்கு
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Oct 2022 7:49 AM IST

கடந்த 23ஆம் தேதி அதிகாலை உக்கடம் காவல் நிலையம் எல்லைகோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் 2 எல்.பி.ஜி சிலிண்டர்கள் உட்பட வெடிபொருட்கள் ஏற்றி வந்த கார் வெடித்துச் சிதறியதில் வாகனத்தை ஓட்டிவந்த உக்கடம் பகுதியைச்சேர்ந்த முபின் தீக்காயங்களுடன் உயிரிழந்தார்.

சம்பவத்தை தொடர்ந்து உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. புலன் விசாரணை மேற்கொள்ளபட்டு தடயங்களைப் பாதுகாக்கப்பட்டது.

தடயவியல் வல்லுநர்களை வரவழைத்து, கைரேகைப்பிரிவு, மோப்ப நாய் பிரிவு என அறிவியல் பூர்வமாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 12 மணி நேரத்தில் இறந்த நபரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனம் 10 உரிமையாளர்களைத் தாண்டி வந்துள்ளது.

சம்பவ இடத்தை டிஜிபி, ஏடிஜிபி ஆகியோரும் பார்வையிட்டனர். 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். FIR-ல் 174, 3a என இருந்ததை தற்போது UAPA(சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) பிரிவின்கீழ் வழக்குப்பதிவு மாற்றப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முபின் இறந்ததைத்தொடர்ந்து 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுடைய கூட்டு சதியைத்தெரிந்துகொண்டு அதற்கான பிரிவு 120b மற்றும் 153a, UAPA பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

Input From: ETV

Next Story
கதிர் தொகுப்பு
Trending News