பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்.. காவல்துறை அறிவிப்பு.!
பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பணத்தை திரும்ப பெற புகார் அளிக்கலாம் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூடியூபில் பப்ஜி எப்படி விளையாடுவது என்பது பற்றி வீடியோ வெளியிட்டும், அதனை லைவ் ஸ்ட்ரீமிங்கின் மூலம் சிறுவர்களுக்கு பப்ஜி விளையாட்டை சொல்லிக் கொடுத்து பணத்தை சம்பாதித்தார்.

By : Thangavelu

சிறுவர்களிடம் மிகவும் ஆபாசமாக பேசி வந்தார். இதனால் சைபர் கிரைம் போலீசில் 150க்கும் மேற்பட்ட புகார்கள் மதன் மீது குவிந்தது. அவரை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று தருமபுரியில் பதுங்கியிருந்த மதனை போலீசார் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பணத்தை திரும்ப பெற அளிக்கலாம். இதற்காக dcpccb1@gmail.com என்ற இமெயில் முகவரியில் புகார் அளிக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.5 ஆயிரம் கொடுத்து ஏமாந்து இருந்தாலும் புகார் அளிக்கலாம் என்றும் புகார் அளிப்பவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.