ராணிப்பேட்டை: வறுமையில் வாடிய 50 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய போலீஸ்.!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழுஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 50 குடும்பங்களுக்கு சிப்காட் போலீசார் அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கினர்.

By : Thangavelu
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழுஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 50 குடும்பங்களுக்கு சிப்காட் போலீசார் அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கினர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பகுதி அருகே, நவ்லாக் புளியங்கண்ணு என்ற கிராமம் உள்ளது. அங்கு 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அன்றாடம் வேலைக்கு சென்று வருபவர்களின் நிலைமை மிகவும் மோசமானது.
அது போன்று அப்பகுதியில் 50 குடும்பங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தது. சாப்பிடுவதற்குகூட எதுவும் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். இதனை அறிந்த சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா தலைமையில், எஸ்.ஐ. சிதம்பரம் உள்ளிட்ட காவலர்கள் இணைந்து, அப்பகுதியில் வறுமையில் வாடியவர்களுக்கு அரிசி, மளிகைப்பொருட்களை வழங்கினர். இதனை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் போலீசாருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
