மாஸ்க் அணிந்து வரும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய காவல்துறையினர்.!
நெல்லை மாவட்டத்தில் பெரும் வரும் கொரோனா தொற்றால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
By : Thangavelu
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
இருந்தபோதிலும் தொற்று எண்ணிக்கை தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் தொற்று தினசரி 3 லட்சத்தை நெருங்கி விட்டது. அதில் தமிழகம் வேகமாக பரவி வரும் மாநிலங்களில் 4வது இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் பெரும் வரும் கொரோனா தொற்றால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நெல்லை வள்ளியூர் காவல் நிலைய அதிகாரிகள், வள்ளியூர் முழுவதும் முககவசம் அணியாத பொது மக்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
மேலும், முககவசம் அணிந்து செல்லும் பொதுமக்களுக்கு வள்ளியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர், இனிப்புகளை வழங்கி பாராட்டி வருகின்றார். பொதுமக்களும் அரசு விதிக்கும் விதிமுறைகளை பின்பற்றி வந்தால், தொற்று பரவுவதை தடுக்க முடியும்.