கோவிலில் திருவிளக்கு பூஜையில் பெண்களை மிரட்டிய போலீசார் - நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அத்துமீறல்!
பாதகரசுவாமி திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை பெண்களை மிரட்டிய போலீஸ் அதிகாரி நீதிமன்ற உத்தரவை மீறி அத்துமீறல்.
By : Bharathi Latha
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி பகுதியில் அமைந்துள்ளது தான் பாதகரசுவாமி திருக்கோவில். இந்த கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டார்கள். அப்பொழுது பெண் பக்தர்களை அங்கிருந்து போலீசார் விரட்டி விட்டதாகவும் கோவிலில் நீதிமன்ற உத்தரவை மீது அத்துமீறல் செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இதைக் கோவிலில் தான் இரு தரப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட முதல் மரியாதை தருவது பிரச்சனை தொடர்பாக வழக்கு உயர் நீதிமன்றத்தில் தொகுக்கப் பட்டிருந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பின் போது, நீதிபதி அவர்கள் கூறுகையில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டும்தான் செலுத்தப்படும். மனிதர்கள் கடவுளுக்கு முன்பாக முதல் மரியாதை பெற்றுக் கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்து இருக்கிறார். கடவுள் தான் அனைத்தையும் விட முதலில் மரியாதைக்குரியவர் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை சார்பில் இந்த பக்தர்கள் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. அதன்படி கோவில் திருவிழா நடத்துவதற்கும் முதல் மரியாதை கடவுளை செலுத்துவதற்கும் நீதிபதி உத்தரவு பெற்றள்ளார்.
இந்த கோவிலில் தான் தற்போது ஒரு புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் இந்தக் கோவையில் திருவிளக்கு பூஜை மூன்றாம் நாள் அக்டோபர் மூன்றாம் தேதி 508 பெண்கள் உடன் திருவிளக்கு பூஜை நடைபெற்றது இந்த பூஜையின் போது ஏராளமான பெண் பக்தர்களின் ஒன்று கூடிய காரணத்தினால் பெரும் கூட்டம் இங்கு எழுந்தது. இந்நிலையில் அங்கு வந்த குரும்பூர் போலீஸ் நிலைய அதிகாரி ராமகிருஷ்ணன் என்பவர் 10 போலீஸ் காரர்களுடன் வந்து பெண்களை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி வெளியில் அனுப்பி இருக்கிறார். தன்னிடம் அனுமதி வாங்காமல் திருவிளக்கு பூஜை நடத்திய காரணத்தினால் தாங்கள் யாரும் உள்ளே செல்லக்கூடாது மீறி சென்றால் அடித்து விரட்டப்படுவீர்கள் என்றும் எச்சரித்து இருக்கிறார். இந்த ஒரு சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Input & Image courtesy: Polimer News