Kathir News
Begin typing your search above and press return to search.

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 'சஜாக் ஆபரேஷன்'! கடல் வழியாக காவல்படையினர் ரோந்து!

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 'சஜாக் ஆபரேஷன்'! கடல் வழியாக காவல்படையினர் ரோந்து!

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சஜாக் ஆபரேஷன்! கடல் வழியாக காவல்படையினர் ரோந்து!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 Jan 2021 5:00 PM GMT

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ‘சஜாக்’ ஆபரே‌ஷன் என்ற பெயரில் கண்காணிப்பு பணியை மேற்கொள்வது வழக்கம். குடியரசு தினத்தை ஒட்டி கன்னியாகுமரி கடல் பகுதியில் இன்று கடலோர காவல்படையினர் சஜாக் ஆபரேஷன் என்னும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவலாம் என்ற கோணத்தில் கன்னியாகுமரி கடலோர காவல்படையினர் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடங்குளம் அணுமின் நிலையங்கள் கடற்கரைப் பகுதியை ஒட்டி இருப்பதாலும் அங்கும் தீவிரவாதிகள் ஊடுருவல் தடுக்க சஜக் ஆப்பரேஷன் என்னும் படகு மூலம் கடலோரப் பகுதிகளை கண்காணிக்கும் ரோந்து பணி இன்று காலை துவங்கி மாலை வரை நடக்கிறது.

கன்னியாகுமரி முதல் கூடங்குளம் வரை சுமார் 38 கிலோ மீட்டர் வரை படகில் சென்று கண்காணித்தனர். அப்போது, கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடமும் சோதனை நடத்தினர். மேலும், மீனவர்களின் அடையாள அட்டை, உரிய ஆவணங்கள் வைத்துள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தினார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News