கிருஷ்ணகிரியில் நீதிபதியின் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.!
நேற்று வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். அப்போது காவலர் அன்பரசனை நீண்டநேரமாக காணவில்லை என்று கூறப்படுகிறது.
By : Thangavelu
கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒருகிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதிக்கு காவலராக பணியாற்றி வந்தவர் அன்பரசன். இவர் கடந்த 6 மாதமாக நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். அப்போது காவலர் அன்பரசனை நீண்டநேரமாக காணவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து சக காவலர்கள் அவரை தேடி உள்ளனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒரு அறையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்போது அவரது உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்துள்ளார் என தெரியவந்துள்ளது. பணிச்சுமையால் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்ற பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.