பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தி.மு.க எதிர்ப்பு பதிவுகளை பகிர்ந்த போலீசார் சஸ்பெண்ட்!
By : Thangavelu
சமூக வலைதளங்களில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும், தி.மு.க. அரசுக்கு எதிராகவும் கருத்துக்களை பகிர்ந்து வந்த போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்தூரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக சுரேஷ் என்பவர் பணியாற்றி வருகின்றார். இவர் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பா.ஜ.க.வுக்கு ஆதரவான செய்திகளையும், தி.மு.க. அரசுக்கு எதிரான கருத்துக்களையும் பதிவிட்டு வந்துள்ளார்.
மேலும், சிவசேனா கட்சியை சேர்ந்த நிர்வாகி சிலர் தி.மு.க. அரசுக்கு எதிரான கருத்துக்களையும், பா.ஜ.க.வுக்கு ஆதரவான செய்திகளையும் பகிர்ந்து வந்துள்ளனர். அதனை காவலர் சுரேஷ் தனது பக்கத்தில் ஷேர் செய்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், தி.மு.க. அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வந்ததால் காவலர் சுரேஷை, கடந்த மே 29ம் தேதி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி சிவசேனா கட்சியின் மாநில அமைப்பாளர் சி.கே.பாலாஜி மற்றும் பிரபல ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
அப்போது துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிவசேனா நிர்வாகி சி.கே.பாலாஜி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: காவலர் சுரேஷ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு ஆதரவாகவும் பதிவிட்டது தொடர்பான விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர் என்றார். மேலும், செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த வேண்டாம் என்ற அறிவுரைகளையும் வழங்கினர். மேலும், தேசபக்தியுடன் பிரதமர் ம«டி மற்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரின் கருத்துக்களை காவலர் சுரேஷ் ஷேர் செய்துள்ளார். இதற்காக அவரை பணியிடை நீக்கம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Vikatan