பொங்கல் பரிசு எல்லாமே வண்டு, புழு: எதிர்த்து கேட்டால் அடிக்கிறாரங்க!
ராமநாதபுரம் மாவட்டம், கன்னிராஜபுரத்தில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு பொருட்களில் 18 பொருட்கள் மட்டுமே இருப்பதாகவும் அதிலும் புழு, வண்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
By : Thangavelu
ராமநாதபுரம் மாவட்டம், கன்னிராஜபுரத்தில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு பொருட்களில் 18 பொருட்கள் மட்டுமே இருப்பதாகவும் அதிலும் புழு, வண்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கன்னிராஜபுரத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் திமுக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு வழங்கியதில் 18 பொருட்கள் மட்டுமே இருந்ததாகவும், அதிலும் புழு, வண்டு இருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் வெறும் 21 பொருட்கள் என்று சொல்லி சரியில்லாதவைகளே கடைகளில் கொடுப்பதாக தமிழகத்தில் பல இடங்களில் புகார்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், கன்னிராஜபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களில் 18 மட்டுமே இருந்தாக கூறப்படுகிறது. அதிலும் தரமற்ற பொருகள் இருப்பதாக பெண் ஒருவர் புகார் தெரிவித்தார். கொடுத்த வெல்லம் மிகவும் மோசமாக இருந்துள்ளது, கோதுமை உள்ளிட்ட பொருட்களில் வண்டு இருந்தாக மூதாட்டி கூறியுள்ளார். இது போன்று மோசமான பொருட்கள் வழங்கினால் கருணாநிதி மகன் ஸ்டாலினிடம் கூறுவேன் என கூறியுள்ளார். இதனால் அந்த பெண்மணியை அடிக்க சிலர் பாய்ந்துள்ளனர். இது பற்றிய வீடியோக்களும் வெளிவருகிறது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Asianet