Begin typing your search above and press return to search.
அரசு வழங்கும் டோக்கனுக்கு மட்டுமே பொங்கல் பரிசு.. தமிழக அரசு தகவல்.!
அரசு வழங்கும் டோக்கனுக்கு மட்டுமே பொங்கல் பரிசு.. தமிழக அரசு தகவல்.!

By :
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையன்று ரூ.2,500 பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பாக அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள் மூலமாக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் டோக்கன்களை மோசடியாக வழங்கப்படுவதாக அரசுக்கு தகவல் சென்றது
இந்நிலையில், தமிழக அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கனுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
மேலும், அதிகாரப்பூர்வ டோக்கனுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்குவது குறித்து சுற்றறிக்கை வெளியிடப்படும். அதுவும் நாளை மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story