Kathir News
Begin typing your search above and press return to search.

பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணியில் பதவி உயர்வு இல்லை. உயர்நீதிமன்றம் உத்தரவா?

The post Graduates who graduated in distance education will not qualified for Promotions.

பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணியில் பதவி உயர்வு இல்லை. உயர்நீதிமன்றம்  உத்தரவா?

ThangaveluBy : Thangavelu

  |  31 July 2021 11:16 AM GMT

திறந்தநிலை கல்வியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

பத்திரப்பதிவு துறையில் 2ம் நிலை சார் பதிவாளர் ஆக தேர்ச்சி அடைந்த செந்தில்குமார் துறைரீதியாக நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும்கூட தனக்கு முதல் நிலை சார் பதிவாளராக பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தனக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், திறந்தநிலை கல்வி மூலமாக முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது என்று திட்டவட்டமாக உத்தரவு பிறப்பித்தனர்..

மேலும், திறந்தநிலை கல்வி மூலமாக முதுகலையில் பட்டம் பெற்றிருந்தாலும், பதவி உயர்வுக்கு தகுதி என்ற முந்தைய அரசின் உத்தரவை ரத்து செய்தும் உத்தரவு பிறப்பித்தனர்.

Source: Top News

Image Courtesy: New Indian Express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News