பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் 38.58 கோடி கடன்கள் வழங்கப்பட்டது: தமிழக பயனர்கள் எவ்வளவு பேர் தெரியமா?
பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 கோடி பேருக்கு ரூ.1.99 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
By : Bharathi Latha
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வியாபாரிகளுக்கு வழங்கும் மிகப்பெரிய கடன் தொகையாக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம். குறிப்பாக இந்த முத்திரை யூஷனா திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் தங்களுடைய தொழில் தொடர்பான தகவல்களை தெரிவித்து அதற்குரிய சான்றிதழ்களை காண்பித்து வங்கிகள் மூலம் கடன்களை பெற்றுக் கொள்ள முடியும். இவற்றிற்கு குறைந்த அளவில் வட்டி தான் வசூலிக்கப்பட்ட வருகிறது.
பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் இதுவரை 38.58 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 கோடி பேருக்கு ரூ.1.99 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் முத்ரா கடன் வழங்கும் திட்டம் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டதிலிருந்து ஜனவரி 27-ந் தேதி வரையிலான நிலவரப்படி 38.58 கோடிக்கும் மேற்பட்ட கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 26.35 கோடிக்கும் மேற்பட்ட கடன்கள் பெண் தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 68 சதவீதமாகும். இதே போல, எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவினருக்கு 51 சதவீத கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, 4,03,63,219 கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மொத்த தொகை ரூ.199068.64 கோடியாகும். புதுச்சேரிக்கு 911718 பேருக்கு, ரூ.5,282.06 கோடி வழங்கப்பட்டுள்ளது. மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கிஷன் ராவ் கரத் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
Input & Image courtesy: News