Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு செய்யும் தமிழக அரசு அதிகாரிகள் - நீதிமன்ற உத்தரவு என்ன?

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட வீடுகளில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு.

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு செய்யும் தமிழக அரசு அதிகாரிகள் - நீதிமன்ற உத்தரவு என்ன?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 Dec 2022 3:20 AM GMT

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தகுதி அற்றவருக்கு வீடுகள் ஒடுக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து தற்போது இதில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. பிரதமர் வீட்டு வசதி வழங்கும் திட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக உயர் நீதிமன்றத்தில் சேக்ஸ்பியர் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதாவது கடந்த 2019- 20ம் ஆண்டில் அரியலூர் மாவட்டத்தில் 23 பெயருக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் மாவட்ட பஞ்சாயத்து செயலர் வீடு ஒதுக்கி இருக்கிறார். இவர்கள் சமூக பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்கள் இல்லை.


ஒரு நபருக்கு இரண்டு, மூன்று வீடுகள் ஏற்கனவே ஒதுக்கி இருக்கிறார்கள். இவ்வாறு பதினொரு பேருக்கு ஒன்றுக்கு மேல் வீடுகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவு திட்ட நிதியில் 12 லட்சத்திற்கும் மேல் மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் மற்றும் அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது. எனவே சட்ட விரோதமான வீடுகளை ஒதுக்கி நிதிமுறைகளில் ஈடுபட்ட அரியலூர் மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகளும் இது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இந்த வழக்கு விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. மேலும் இந்த தவற்றில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. சமுதாயத்தில் அடித்தட்டு மக்களுக்கு வீடுகள் வழங்க வழங்குவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். ஆனால் பஞ்சாயத்து அதிகாரிகள் சிலர் நடவடிக்கையால் திட்டத்தின் நோக்கம் அடிபட்டு வருகிறது. நிதிமுறை கேட்டில் ஈடுபட்ட பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News