சாலையில் அடிபட்டுக்கிடந்த கர்ப்பிணி பசு.. உரிமையாளர் கதறல்.. அமைச்சர் விஜயபாஸ்கரின் நெகிழ்ச்சியான செயல்..!
சாலையில் அடிபட்டுக்கிடந்த கர்ப்பிணி பசு.. உரிமையாளர் கதறல்.. அமைச்சர் விஜயபாஸ்கரின் நெகிழ்ச்சியான செயல்..!
By : Kathir Webdesk
சாலையில் அடிப்பட்டுக்கிடந்த கர்ப்பிணி பசுவிற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி அளித்த சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. நமது நாட்டில் கால்நடை விலங்குகளை விவசாயிகள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து வளர்த்து வருகின்றனர். தங்களின் கால்நடைக்கு எதாவது பிரச்சனை என்றால் துடித்துடித்து போய்வார்கள் விவசாயிகள்.
அம்மா என்று பசு மாடு கூப்பிட்டால் உடனடியாக ஓடோடி வந்து அதற்கான உணவுகளை அளித்த பின்னரே தான் அடுத்த பணியை செய்வார் விவசாயி.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் காரில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கர்ப்பிணி பசு மாடு அடிப்பட்டு உயிருக்காக போராடியுள்ளது. இதனையடுத்து தனது காரை நிறுத்தி அதற்கு தண்ணீர் அளித்தார். பின்னர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளித்தார்.
அப்போது பசு மாட்டின் பெண் உரிமையாளர் அழுது கொண்டிருந்தார். அவருக்கு ஆறுதல் அளித்ததோடு, புதிய பசு மாடு வாங்கி தரப்படும் எனவும் உறுதியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சாலையில் கவனம் கொள்ளுங்கள், மனிதர்கள் மீது மட்டுமல்ல விபத்தில் அடிபட்ட விலங்குகளையும்
மனிதாபிமானத்துடன் காப்பாற்ற எண்ணுங்கள்.. சாலையில் அடிபட்டு கிடந்த கர்ப்பிணி பசுவின் கதறலும்.. வளர்த்தவர்களின் கண்ணீரும்.. என்னை கலங்க வைத்தன... அனைத்து ஜீவராசிகளுக்குமானது இவ்வுலகம்! என்று குறிப்பிட்டுள்ளார் முகநூல் பக்கத்தில். இனிமேலாவது சாலையில் செல்லும்போது கால்நடைகளை கண்டால் சற்று நிதானமாக செல்லுங்கள்.