கர்ப்பிணி, தனது கணவருடன் தற்கொலை.. திருப்பூரில் சோகம்.!
கர்ப்பிணி, தனது கணவருடன் தற்கொலை.. திருப்பூரில் சோகம்.!

திருப்பூர் அருகே திருமணமாகி 2 வருடத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே வசித்து வருபவர் பாலமுருகன் 31. இவருக்கு கவிதா 21, என்ற பெண்ணுடன் கடந்த 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது கவிதா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். பாலமுருகன் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களின் வீட்டிற்கு அருகாமையில் பாலமுருகனின் சகோதரர் கார்த்திகேயன் தனது மனைவியுடன் வசித்து வருகின்றார்.
இந்நிலையில், கார்த்திகேயன் பாலமுருகனுக்கு செல்போனில் அழைப்பு விடுத்துள்ளார். பல முறை முயற்சித்தும் பாலமுருகன் போன் காலை எடுக்க வில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து கார்த்திகேயன் பாலமுருகன் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்துள்ளார்.
அப்போது அவர்கள் வீடு உள் பக்கமாக பூட்டியிருந்தது. இதனை தொடர்ந்து கதவை உடைத்து திறந்து உள்ளே பார்க்கையில் இருவரும் சடலமாக கிடந்துள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து அங்கு நடத்திய சோதனையில் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், தங்களின் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலையா அல்லது கொலையான என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், திருமணமாகி 2 வருடங்களிலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த வழக்கு ஆர்டிஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.