மதுரைக்கு வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: விழாக்கோலம் பூண்ட தூங்கா நகரம்!
பிப்ரவரி 18 மற்றும் 19-ம் தேதிகளில் குடியரசுத் தலைவர் தமிழ்நாட்டில் பயணம்.
By : Bharathi Latha
குடியரசுத் தலைவர் இன்று மதுரைக்கு வருகை தந்திருக்கிறார். முதல் முறையாக மதுரைக்கு வரும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, இவர் தான் இந்த பெருமையை தற்போது பெற்று இருக்கிறார். மதுரை விமான நிலையத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு இருக்கிறது குறிப்பாக வரும் மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்து இருக்கிறார். தூங்கா நகரம் என்ற பெயர் கொண்ட மதுரை மாநகரம் தற்பொழுது விழாக்கோலம் பூண்டு இருக்கிறது. பல்வேறு 5 அடுக்கு பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
குடியரசுத்தலைவர் இன்று மதுரைக்கு வருகை தந்தமை காரணமாக மதுரை விமான நிலையம் முதல் மீனாட்சியம்மன் கோவில் வரை 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிப்ரவரி 18 மற்றும் 19-ம் தேதிகளில் தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
கோயமுத்தூரில் ஈஷா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் மஹா சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிப்ரவரி 18-ம் தேதி பங்கேற்கிறார். பிப்ரவரி 19-ம் தேதி உதகமண்டலம் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் திருமதி. திரவுபதி முர்மு அவர்களிடையே உரையாற்றுகிறார்.
Input & Image courtesy: Dinamalar