தேவேந்திர குல வேளாளர் மசோதா: ஜனாதிபதி ஒப்புதல்.!
தமிழகம் முழுவதும் தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பண்ணாடி, வாதிரி ஆகிய உட்பிரிவுகளில் இருந்த மக்கள் அனைவரும் தங்களை ‘தேவேந்திர குல வேளாளர்’ என்று ஒரே பெயரில் அழைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
By : Thangavelu
தமிழகத்தில், 7 ஜாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் வகையில் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பண்ணாடி, வாதிரி ஆகிய உட்பிரிவுகளில் இருந்த மக்கள் அனைவரும் தங்களை 'தேவேந்திர குல வேளாளர்' என்று ஒரே பெயரில் அழைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதனை ஏற்ற மத்திய, மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கைள் எடுக்கப்படும் என உறுதியளித்தது. இதனை தொடர்ந்து சட்ட திருத்த மசோதா நாடாளுன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதே போன்று ராஜ்யசபாவிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், ஜனாதிபதி தேவேந்திர குல வேளாளர் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் சட்டம் நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றத்துக்கு தேவேந்திர குல வேளாளர் மக்கள் அனைவரும் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.