Begin typing your search above and press return to search.
சென்னையில் இருந்து ஊட்டி புறப்பட்ட குடியரசுத்தலைவர் !
நாளை குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெறும் கொடி மாற்று நிகழ்ச்சி மற்றும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

By :
அரசு முறை பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று சென்னை வந்தார். சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்தை திறந்து வைத்தார். இதனையடுத்து இன்று சென்னையில் இருந்து கோவை புறப்பட்டு சென்றார். தனி விமானம் மூலம் அவர் கோவையில் உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் இறங்குகிறார்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஊட்டி செல்கிறார். ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். இன்று இரவு தங்கும் குடியரசுத் தலைவர் நாளை குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெறும் கொடி மாற்று நிகழ்ச்சி மற்றும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Source: Dinakaran
Image Courtesy: ட்விட்டர்
https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=695179
Next Story