Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் பாதிரியார்.!

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் பாதிரியார்.!

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் பாதிரியார்.!

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  17 Nov 2020 8:28 AM GMT

முஸ்லிம்களின் தடுப்பூசி எதிர்ப்பு பிரச்சாரம் ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசிக்கு எதிராக கிறிஸ்தவ மத போதனை செய்பவர்கள் தங்கள் டிவி சேனல்களில் பொய்ப் பிரச்சாரம் செய்வது தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு‌ ஆண்டும் கேரளாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் பற்றிய செய்திகள் வெளியாவது வழக்கம்.

எண்ணற்ற உயிரிழப்புகளால் உலகமே கொரோனா வைரஸ் பாதிப்பைத்‌ தடுக்கும் தடுப்பு மருந்து எப்போது கண்டுபிடிக்கப்படும் என்று எதிர்பாரத்துக் கொண்டிருக்கும் வேளையில் கொரோனா தடுப்பூசியில் சிப் இருக்கிறது என்று புரளியைக் கிளப்பி விடுகிறது ஒரு‌ புது கோஷ்டி.

ஜீசஸ் மினிஸ்ட்ரீஸ் என்ற பெயரில் சுவிசேஷ அமைப்பு ஒன்றை நடத்தி வரும் சாது செல்வராஜ் என்பவர் ஏஞ்சல் டிவி என்ற தொலைக்காட்சி சேனலில் தனது சுவிசேஷ நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவார். அவ்வாறு ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் தான் அவர் தடுப்பூசிக்கு எதிராக, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியது தெரிய வந்துள்ளது.

ஏஞ்சல் டிவி நிகழ்ச்சி ஒன்றில் அதன் உரிமையாளர் சாது சுந்தர் செல்வராஜ் கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசியில் சிப் வைக்கப்படுவதாகவும் அது சாத்தான் என்றும் கூறுவதாக வருகிறது. மேலும் தடுப்பூசி போடாமல் தப்பி ஓடுமாறு கூறுவதாகவும் வருகிறது.

அதை டிவியில் பார்க்கும் ஒரு பெண் பின்னர் ஒரு நாள் சுகாதாரப் பணியாளர்கள் தடூப்பூசி போட வரும் போது அதை நினைவில் வைத்துக் கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கிறார். அதோடு நில்லாமல் பிறரையும் ஊசி போட்டுக் கொள்ளாதீர்கள் என்று வற்புறுத்துகிறார்.‌ அப்போது மற்றொரு பெண் "ஆமா பாஸ்டர் சொன்னாரு. இதுல சிப் வைக்கிறாங்களாம்" என்று கூறுகிறார்.

தடுப்பூசி போடும் முகாமை ஏற்பாடு செய்தவரை காவி துண்டு அணிந்த அரசியல்வாதியாகக் காட்டுகிறார்கள். அவர் பெண்ணை மிரட்டுவது போலவும், சாது செல்வராஜ் டிவி‌ நிகழ்ச்சியில் கூறியதை நினைவில் கொண்டு அந்தப் பெண் ஊசி போட்டுக் கொள்ளாமல் தப்பித்து ஓடி விடுவது போலவும் காட்சி அமைந்துள்ளது. தாங்கள் போட்டுக் கொள்ளாததோடு பிறரையும் தடுப்பூசிக்கு எதிராகத் திருப்பும் பிரச்சாரத்தை மத அமைப்பு ஒன்று மேற்கொள்வது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவி உடை அணிந்து கொண்டு 'சாது' என்று தன்னை அழைத்துக் கொண்டு அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றி வரும் செல்வராஜ், இதற்காக வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் மட்டும்‌ சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜீசஸ் மினிஸ்ட்ரீஸ் அமைப்பு அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகளிடம் இருந்து ₹ 2 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. பொதுவாக கிறிஸ்தவ அமைப்புக்கள் அரசின் வளர்ச்சிப் பணிகளுக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுவது வழக்கம். தற்போது உலகமே ஒரு‌ கொள்ளை நோயால் கடும் இழப்புக்களைச் சந்தித்துக் கொண்டு இருக்கும் போது தடுப்பூசிக்கு எதிராக பொய்ப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News