செஸ்போர்டு கரை வேட்டி, சட்டை அணிந்து சென்னை வந்த பிரதமர் மோடி!
By : Thangavelu
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை, மாமல்லபுரம் அருகே உள்ள பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு மிகப்பெரிய பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இந்த போட்டிக்கான தொடக்க விழா இன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இதனை பிரதமர் மோடி பங்கேற்று துவக்கி வைக்கிறார். மொத்தம் 187 நாடுகளை சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளது.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தனி விமானத்தில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். செஸ்போர்டு கரை வேட்டி சட்டை அணிந்து வந்தார். அவரை அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு எம்.பி., உள்ளிட்டோர் வரவேற்றனர். அதனை தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ்., அடையாறு கடற்படைத் தளம் சென்றடைகிறார். அங்கிருந்து விளையாட்டு மையத்திற்கு சாலை மார்க்கமாக செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு பா.ஜ.க., சார்பில் பல்வேறு இடங்களில் பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
Source, Image Courtesy: Maalaimalar