கோவையில் பிரதமர் மோடி.. புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.!
கோவையில் பிரதமர் மோடி.. புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.!
By : Kathir Webdesk
பிரதமர் மோடி இன்று காலை புதுச்சேரி மாநிலத்தில் அரசு விழாவில் பங்கேற்றார். இதனை தொடர்ந்து கோவையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி மற்றும் பாஜக மாநாட்டில் கலந்து கொள்கிறார். இதனையொட்டி சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக கோவை சென்ற பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு காரில் புறப்பட்டு சென்றார். அப்போது வழி நெடுகிலும் பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சில் தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆளுநர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.