Begin typing your search above and press return to search.
ஔவையார் பாடலை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி உரை
ஔவையார் பாடலை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி உரை
By : Kathir Webdesk
தமிழகத்தில் முடிக்கப்பட்ட திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகை புரிந்துள்ளார். பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றனர். இதன் பின்னர் விழா நடைபெறும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு பிரதமர் சென்றார்.
அப்போது கூடியிருந்த மக்கள் அனைவரும் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். அனைவருக்கும் பிரதமர் கையசைத்தபடி விழா மேடைக்கு சென்றார்.
இந்நிலையில், பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர் ஔவையார் பாடலை மேற்கோள்காட்டி உரையாற்றியதாவது: ‘வரப்புயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்; நெல் உயர குடி உயரும்; குடி உயர கோல் உயரும்; கோல் உயரக் கோன் உயர்வான்’ என்ற ஔவையார் பாடலை மேற்கோள் காட்டி உரையாற்றினார்.
Next Story