அண்ணாவின் பிறந்தநாளை காரணம் காண்பித்து 75 தமிழக கைதிகளுக்கு முன்கூட்டியே விடுதலை!
அண்ணாவின் 113 வது பிறந்த நாளை முன்னிட்டு 75 தமிழக சிறையில் உள்ள கைதிகள் முன்கூட்டியே விடுதலை.
By : Bharathi Latha
அண்ணாவின் 113 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும் 700 தண்டனை கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல் அமைச்சர் அண்மையில் அறிவித்து இருந்தார். அதேபோல 75வது சுதந்திர தினத்தை ஒட்டி, சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நன்னடத்தை உள்ள கைதிகளில் 75 பேரை அடையாளம் கண்டு பட்டு அவர்களை விடுதலை செய்யும் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி இருந்தது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் மத்திய சிறை சாலையில் நீண்ட நாட்களாக நடைபெற்று இருக்கும் கைதிகளை விடுதலை செய்வது குறித்து அவர்களை அடையாளம் காணும் விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
இதில் 10 ஆண்டுகள் சிறையில் உள்ள கைதிகள், நன்னெறிவுடன் இருக்கும் கைதுகள் ஆகியோர் விடுதலை செய்யப்படுவதற்கு தகுதியானவர்கள் என அடையாளம் காணப்பட்டது. அது வேளையில் பயங்கர செயல்களில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு எதிரான குற்றம், வரதட்சணை தொடர்பான மரணம், பொருளாதார குற்றங்கள், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், மத ரீதியான வன்முறை ஆகிய குற்றங்களில் தண்டனை பெறுவோர்க்கு விடுதலை பெற தகுதி அற்றவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி தற்பொழுது புழல் மத்திய சிறையில் இருந்து 13 பேர், வேலூர் மத்திய சிறையில் இருந்து இரண்டு பேர், கடலூர் மத்திய சிறையில் இருந்து ஐந்து பேர், சேலம் மத்திய சிறையில் இருந்து ஒருவர், கோவை மத்திய சிறையில் இருந்து 12 பேர், திருச்சி மத்திய சிறையில் இருந்து 12 பேர், மதுரை மத்திய சிறையில் இருந்து 22 பேர், புதுக்கோட்டை மாவட்ட ஸ்ரீ மற்றும் சீர்திருத்த பள்ளியில் இருந்து நான்கு பேர், புழல் பெண்கள் சிறையில் இருந்து இரண்டு பேர், திருச்சி பெண்கள் சிறையில் இருந்து இரண்டு பேர் என மொத்தமாக 75 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Hindu News