Kathir News
Begin typing your search above and press return to search.

தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம்.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.!

தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம்.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  14 Jun 2021 3:03 PM IST

தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பலர் உயிருக்கு ஆபத்தான் நிலையில், மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அது போன்றவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வதற்கு உதவுவது ஆம்புன்ஸ்கள் மட்டுமே. இதனால் தனியார் ஆம்புலன்ஸ்கள் தங்களுக்கு பிடித்தமான தொகைகளை நோயாளிகளிடம் வாங்கி வருகின்றனர். இதனால் பகல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.





இந்நிலையில், நோயாளிகளை அழைத்துச் செல்லும் சாதாரண ஆம்புலன்ஸ்கள் முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூபாய் 1500 மட்டுமே வசூல் செய்ய வேண்டும். ஆக்சிஜன் வசதி உள்ள ஆம்புலன்ஸ்கள் முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.2,000 வசூல் செய்து கொள்ளலாம்.




மேலும், வென்டிலேட்டர் உள்ளிட்ட அதிநவீனகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் ரூபாய் 4000 வசூலிக்கலாம். 10 கிலோ மீட்டருக்கு மேல் சாதாரண ஆம்புலன்ஸ்கள் கிலோ மீட்டருக்கு கூடுதலாக ரூ.25 வசூல் செய்யலாம். அதே போன்று உயிர் காக்கும் கருவி கொண்ட ஆம்புலன்ஸ்கள் கூடுதலான கிலோ மீட்டருக்கு ரூ.50 மட்டுமே வசூல் செய்து கொள்ளலாம் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News