Kathir News
Begin typing your search above and press return to search.

தந்தூரி சாப்பிட்டு உயிரிழந்த மாணவனின் உடலை புதைக்கவிடாமல், எரிக்க கட்டாயப்படுத்திய அரசியல் புள்ளி - பின்னணியில் யார்?

தந்தூரி சாப்பிட்டு உயிரிழந்த மாணவனின் உடலை புதைக்கவிடாமல், எரிக்க கட்டாயப்படுத்திய அரசியல் புள்ளி - பின்னணியில் யார்?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Jun 2022 8:20 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் திருமுருகன் வயது (17). தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடந்த 24ந் தேதி நண்பர்களுடன் ஆரணி நகர் பகுதியில் காந்தி ரோட்டில் உள்ள 5 ஸ்டார் எலைட் என்ற அசைவ உணவகத்தில் நண்பர்களுடன் அசைவ உணவு சாப்பிட்டுள்ளனர். மேலும் அன்று இரவு முழுவதும் வயிற்று வலி வாந்தி ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளார்.

கடந்த 29ம் தேதி வயிற்று வலியால் துடித்த அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் செல்லும் வழியிலேயே மாணவன் திருமுருகன் பரிதாபமாக உயிரழந்தார்.

உடலை ஆரணிக்கு கொண்டு வந்து உறவினர்கள் முன்னிலையில் இடுகாட்டில் வைத்து எரித்து அடக்கம் செய்தனர். இந்த நிலையில் இறந்த மாணவனின் தந்தை கணேஷ் ஆரணி நகர காவல்நிலையத்திற்கு வந்து என் மகன் சாவிற்கு காரணமான 5 ஸ்டார் எலிட் என்ற அந்த தனியார் அசைவ உணவகம் தந்தூரி மற்றும் பிரியாணி சாப்பிட்டதால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டுள்ளது.

மகன் இறந்த துக்கத்தில் இருந்த தன்னிடம் புதைக்கும் வழக்கத்தை மாற்றி எரிக்கும் படி சில முக்கிய பிரமுகர்கள் அழுத்தம் கொடுத்தால் சடலத்தை எரித்து விட்டு இறுதி சடங்கு செய்து விட்டோம் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் தெரிவித்துள்ளார்.

InputsFrom: abplive


Next Story
கதிர் தொகுப்பு
Trending News