சொத்து வரி உயர்வு: 13 லட்சம் குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய சென்னை மாநகராட்சி!
By : Thangavelu
சொத்து வரி உயர்த்துவது குறித்து கடந்த 30ம் தேதி நடைபெற்ற சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதன்படி சென்னையில் சொத்து வரியை உயர்த்துவது குறித்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கு என்று சொத்து உரிமையாளர்களுக்கு படிவம் 6 நோட்டீசை சென்னை மாநகராட்சி வழங்கி உள்ளது. அதாவது படிவத்தில் கட்டிடங்களின் அளவு, பரப்பளவு, தெரு, திருத்தப்பட்ட வரித்தொகை இடம் பிடித்துள்ளது. மாநகராடசியில் 13 லட்சத்து 6 ஆயிரத்து 777 குடியிருப்புகள் உள்ளது. அதன் உரிமையாளர்கள் அனைவருக்கும் சொத்து வரி உயர்வு குறித்த நோட்டீஸ் அடுத்த வாரம் முதல் வினியோகம் செய்யப்பட இருக்கிறது.
இது குறித்து சென்னை மாநகராடசி அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், சொத்துவரி உயர்வு தொடர்பான போட்டீஸ் வருகின்ற ஜூன் 13 அல்லது 14ம் தேதி முதல் அச்சடிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு குடியிருப்புக்கும் வித்தியாசமான முறையில் அச்சிடபட உள்ளது என்றார். இந்த நோட்டீசால் வீட்டு உரிமையாளர்கள் தற்போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Source, Image Courtesy: Maalaimalar