அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஸ்ரீரங்கம் கோவில் ஐயர் பேட்டி!
அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து சென்னையில் 5 தேதி ஆர்ப்பாட்டம் செய்வதாக ஸ்ரீரங்கம் கோயிலின் ஐயர் பேட்டி அளித்து இருக்கிறார்.
By : Bharathi Latha
ஸ்ரீவில்லிபுத்தூர் ஐயர் செய்தியாளர்களுக்கு பேட்டியில் கூறுகையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வழிபாட்டு முறை குறித்து இராமானுஜர் வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளார். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிலர் அந்த வழிமுறைகளை மாற்றி செயல்பட்டு வருகின்றனர். கோவில் நிர்வாகத்திற்கு அறநிலையத்துறை ஒத்துழைப்பு கொடுக்காததாலும் சில அலுவலர்கள் அலுவலகங்கள் தனிச்சியாக செயல்பட்டு வருகிறார்கள்.
கோவிலில் உள் விவகாரங்களில் தலையிட அறநிலையத்துறைக்கு உரிமை இல்லை. ஆனால் ஆகம விதிகளை மீறி கோவில் நடைமுறைகளில் அவர்கள் மாற்றம் செய்து வருகிறார்கள். அதில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கோவில் நடைமுறைகளில் ஒரு சில அதிகாரிகள் செய்த தவற்றால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.
கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு நடவடிக்கைகளில் வரவேற்கிறோம். விதிமீறல்கள் ஈடுபடும் அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலில் உள்ள விவகாரங்களில் தலையிடும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து வருகின்ற ஐந்தாம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருக்கிறோம். இதில் திரளான அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று அவர் கூறி இருக்கிறார்.
Input & Image courtesy: Oneindia News